ஆப்நகரம்

தமிழர்களை நிம்மதியா வாழ விடவே மாட்டீங்களா; 8 மீனவர்களை கைதுசெய்த இலங்கை!

தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

TNN 17 Oct 2017, 7:33 am
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
Samayam Tamil tamilnadu fishermen arrested by srilankan navy
தமிழர்களை நிம்மதியா வாழ விடவே மாட்டீங்களா; 8 மீனவர்களை கைதுசெய்த இலங்கை!


தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது, ஆழ்கடல் மீன்பிடிப்பை கையாள நேர்கிறது. அப்போது அங்கு வரும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக கூறி, மீனவர்களை கைது செய்துவிடுகின்றனர்.

மேலும் அவர்களை சிறையில் அடைப்பதுடன், படகுகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் ஏற்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க, பலகட்டப் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வு விடியலே கிடையாது என்று தொடர் கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தனுஷ்கோடி - மன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களை படகுகளையும் பறிமுதல் செய்து, மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

Tamilnadu fishermen arrested by Srilankan Navy.

அடுத்த செய்தி