ஆப்நகரம்

வீடியோ வெளியிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரின் பணியிடை நீக்கம் ரத்து!

அரசுப் பேருந்துகளின் நிலை குறித்து பேசி வீடியோ வெளியிட்டதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் விஜயகுமார், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

Samayam Tamil 9 Oct 2018, 3:01 pm
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசுப் பேருந்துகளின் நிலை குறித்து பேசி வீடியோ வெளியிட்டதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் விஜயகுமார், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
Samayam Tamil வீடியோ வெளியிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரின் பணியிடை நீக்கம் ரத்து!
வீடியோ வெளியிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரின் பணியிடை நீக்கம் ரத்து!tam


மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுநராக பணிபுரியும் விஜயகுமார், திருச்சியில் இருந்து பழனிக்கு தாம் ஓட்டிவந்த பேருந்தில் ஷட்டர் சேதமடைந்துள்ளதாக கூறி, அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதை தொடர்ந்து அரசு பேருந்துகள் குறித்து அவதூறாக செய்தி பரப்பியதாகவும், பயணிகளிடம் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கியதாகவும் நேற்று அவரைப் பணியிடைநீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று அவரது பணியிடை நீக்க உத்தரவை போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி