ஆப்நகரம்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ஆயிரம் உதவித்தொகை...

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் அளித்து உதவ அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2020, 10:46 pm
கொரோனா ஊரடங்கு நாட்டையே அச்சுறுத்தி வரும் சூழலில் மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. கொரோனா காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
Samayam Tamil தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ஆயிரம் உதவித்தொகை...
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ஆயிரம் உதவித்தொகை...


இந்த நேரத்தில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதுதான் முக்கியம் என உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி அதைத் தீவிரப்படுத்தி வருகிறது. எனினும் தொடர்ந்து சோதனைகள் அதிகரிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர் என்பதை எளிதாகக் கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தினசரி வேலை பார்த்து பணம் சம்பாதித்து தங்கள் குடும்பத்தை வழிநடத்தி வந்தவர்கள் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

இதை மனதில் கொண்டு தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்கள், பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்கள், திருநங்கைகள் உள்பட சில பிரிவினருக்கு ரூ. ஆயிரம் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது. சென்னை, கோவை, சேலம், திருவாரூர் மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவை வழங்கி வருகிறது.

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா நோயாளி...

இந்த சூழலில் பல நாட்களாக நிலுவையிலிருந்த கோரிக்கை ஒன்றை நிறைவேற்றி ஆயிரத்து 778 தொழிற்சாலைகளைச் சேர்ந்த 21 ஆயிரத்து 770 தொழிலாளர்களுக்கு தலா ரூ. ஆயிரம் வழங்க முடிவு வழி செய்துள்ளது. இதற்காகத் தமிழ்நாடு அரசு ரூ. 2. 177 கோடி ஒதுக்கியுள்ளது.

இதற்கிடையே பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் நிவாரண தொகை கொடுத்து தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி