ஆப்நகரம்

தமிழகத்தைப் பெருமைப்பட செய்த வீரர்களை கௌரவித்த தமிழக அரசு!

காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெற்று தங்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Samayam Tamil 24 Apr 2018, 12:53 pm
காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெற்று தங்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
Samayam Tamil தமிழகத்தைப் பெருமைப்பட செய்த வீரர்களை கௌரவித்த தமிழக அரசு!
தமிழகத்தைப் பெருமைப்பட செய்த வீரர்களை கௌரவித்த தமிழக அரசு!


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் கடந்த வாரம் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளில், இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் பதக்கங்களை அள்ளி சாதனைப் புரிந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதில், பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஸ்குமாருக்கு ரூ.50 லட்சமும், டேபிள் டென்னீஸ் போட்டியில் 1 தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்ற அமல்ராஜ், சத்தியன் ஆகியோருக்கு தலா 1 கோடியும், மற்றொரு மேசைப்பந்து வீரர் சரத்கமலுக்கு ரூ.50 லட்சமும், ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி வென்ற சவுரவ் கோஷல் மற்றும் ஜோஷ்வா சின்னப்பா ஆகியோருக்கு தலா 30 லட்சமும், ஸ்குவாஷ் போட்டியில் இரண்டு வெள்ளிப்பதக்கங்களை அள்ளிய தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிகளுக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இதேபோல், வீரர்களுக்கு உதவிய பயிற்சியாளர்கள் மற்றும் பிற உதவி நிர்வாகிகளுக்கும் தமிழக அரசு ஊக்கத்தொகையை வழங்கியது. இதைத்தொடர்ந்து, ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு வீரர், வீராங்கனைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி