ஆப்நகரம்

சைடு கேப்பில் டாஸ்மாக் சரக்கு விற்பனை நேரத்தை கூட்டிய தமிழக அரசு!

தமிழக அரசு அறிவித்துள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கம் தொடர்பான வழிகாட்டுதலில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 31 May 2020, 3:12 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அந்த வகையில், கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத்ம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால், உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியதையடுத்து, கடந்த 16ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கி வருகின்றன. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கிய டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு கடை ஒன்றில் 500 டோக்கன் மட்டுமே கொடுக்கப்பட்டு மதுவகைகள் விற்கப்பட்டன.

அரசு பேருந்துகளில் கட்டணம் கூடுகிறதா? போக்குவரத்து துறை விளக்கம்!

ஆனால், டாஸ்மாக் கடைகளில் எதிர்பார்த்த வருவாய் அரசுக்கு கிட்டவில்லை என தெரிகிறது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை என அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என தெரிவித்துள்ளது.

தமிழக அரசு உத்தரவு


டாஸ்மாக் கடைகளுக்கு எழுந்து வரும் எதிர்ப்பையடுத்து, அக்கடைகள் இயங்கும் நேரம் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைக்கப்பட்டது. ஆனாலும், பொது முடக்க காலத்தில் காலை 10 மணிக்கே டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனையில் ஈடுபடும் அரசு, டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்படத்தக்கது.

அடுத்த செய்தி