ஆப்நகரம்

ஒரு மாதத்துக்கு இ-பாஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு; ஆனா ஒரு கண்டிஷன்!

தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ-பாஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 24 Jul 2020, 6:03 pm
தமிழகத்தை பொறுத்தவரை கொரனா ஊரடங்கு அமல்படுத்திய பின்னர் பொதுமக்கள் வெளியில் வரத் தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர், பணி நிமித்தம் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் செய்து பாஸ் பெற்று செல்கின்றனர். ஆனால், இந்த இ-பாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சரியான காரணங்கள் இருந்தும் முறையாக ஆவணங்கள் இல்லாததால் ஏராளமானோர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பலரும் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் தமிழகத்தில் இருந்து, ஆந்திரா சென்று வரும் நிலையில், நாள்தோறும் இ-பாஸ் பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது. இதனால், தினசரி இ-பாஸ் வழங்காமல் ஒரு மாதத்துக்கு இ-பாஸ் வழங்க வேண்டும் என்று தொழிற்சாலை நிர்வாகங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

கொடுமை: சாலையில் பாலை ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம்!

இதனையேற்றுக் கொண்டுள்ள தமிழக அரசு, ஒரு மாதத்திற்கான இ-பாஸ் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது எனவும், தொழிற்சாலைகள் சார்பில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர்களை அழைத்து வர தொழிற்சாலை நிர்வாகமே வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி