ஆப்நகரம்

உதயமாகிறது மேலும் 3 மாவட்டங்கள்... தமிழக மாவட்டங்களை 40அக உயர்த்த அரசு திட்டம்?

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு குறைந்து வருவதால், தனது சொந்த தொகுதியான எடப்பாடியை பிரித்து அந்த மாவட்டத்தில் தனது சொந்த செல்வாக்கை அதிகரிக்க முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது

Samayam Tamil 7 Jan 2020, 1:21 pm
சென்னை: தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதியும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி பகுதியும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதியும் பிரிக்கப்பட்டு தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர்கள், காவல் கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நிர்வாக பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல்: சட்ட மசோதா இன்று தாக்கல்

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பழைய ஒருங்கிணைந்த மாவட்டங்களாகிய நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனையை மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடைபெற்றது.

பொங்கல் போனஸ் எவ்வளவு தெரியுமா?- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

இந்நிலையில், புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியும், தஞ்சை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையும், சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியும் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிகிறது.

எதற்காக நாளை இப்படியொரு மாபெரும் வேலைநிறுத்தம்?- ”பாரத் பந்த்” என்ன பாதிப்பை ஏற்படுத்தும்!

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு குறைந்து வருவதால், தனது சொந்த தொகுதியான எடப்பாடியை பிரித்து அந்த மாவட்டத்தில் தனது சொந்த செல்வாக்கை அதிகரிக்க முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி