ஆப்நகரம்

பாலில் கலப்படமா அல்லது கலப்படத்தில் பாலா!? 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை!

கலப்பட பால் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

TOI Contributor 19 Jun 2017, 12:41 pm
கலப்பட பால் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil tamilnadu government submitted report in high court on adulteration of milk
பாலில் கலப்படமா அல்லது கலப்படத்தில் பாலா!? 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை!


எல்லாவற்றிலும் கலப்படம் தான் நிலை இன்று உருவாகிவிட்டது. உணவுப்பொருளில் கலப்படம் என்பது வெகுநாட்களாக இருக்கிறது என்றாலும், இன்று பச்சிளம் குழந்தைகள் குடிக்கும் பாலில் கூட கலப்படம் செய்கின்றனர். தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்களில் பாலில் கலப்படம் என்று தொடர்ந்து புகார் கூறி வந்தார். ஆனால் அதற்கு எதிராக நடவடிக்கை எதுவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை அடுத்து சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் பாலில் கலப்படம் இருப்பதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு இது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று தமிழக அரசு பாலில் கலப்படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை 886 பால் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்றும், அதில் 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை என்றும் அறிக்கை அளித்துள்ளது.

தமிழக மாநில செயலாளர் தலைமையில் மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் நடத்திய சோதனையின் முடிவில் பாலில் அதிக அளவிற்கு கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் விழுப்புரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் என்பவர் ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி