ஆப்நகரம்

நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவந்தால் தமிழக அரசு எதிா்கொள்ளும் – அமைச்சா்

எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தால் அதனை தமிழக அரசு தைாியமாக எதிா்கொள்ளும் என்று அமைச்சா் ஜெயக்குமாா் தொிவித்தாா்.

TOI Contributor 10 Sep 2017, 7:34 pm
எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தால் அதனை தமிழக அரசு தைாியமாக எதிா்கொள்ளும் என்று அமைச்சா் ஜெயக்குமாா் தொிவித்தாா்.
Samayam Tamil tamilnadu government will prove the majority in parliament said jayakumar
நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவந்தால் தமிழக அரசு எதிா்கொள்ளும் – அமைச்சா்

சென்னை விமான நிலையத்தில் அமைச்சா் ஜெயக்குமாா் செய்தியாளா்கள் மத்தியில் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், தமிழகத்தில் அறுதி பெரும்பான்மையுடன் ஜெயலலிதாவின் அரசு செயல்பட்டு வருகிறது.

ஆளுநா் வித்யாசாகா் ராவ் அரசியலமைப்பு சட்டத்தின் படியே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறாா். சட்டமன்றத்தை கூட்டுவதற்கு எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது.

சட்டமன்றத்தில் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீா்மானத்தை கொண்டுவரும் பட்சத்தில் தமிழக அரசு அதனை தைாியமாக எதிா் கொள்ளும் என்று அவா் தொிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், கட்சியின் விதிகளின் படியே பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் நிரூபிக்க தயாராக உள்ளோம். ஜி.எஸ்.டி. தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் 60 பொருட்கள் மீதான வாிவிதிப்பில் மாற்றம் கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சா் ஜெயக்குமாா் தொிவித்தாா்.

அடுத்த செய்தி