ஆப்நகரம்

தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர், பன்வாரிலால் புரோஹித் சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

Samayam Tamil 26 Jan 2018, 11:11 am
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர், பன்வாரிலால் ​ புரோஹித் சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil tamilnadu governor banwarilal purohit lit the national flag
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!


நாடு முழுவதும் 69வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றினார். குடியரசு தினத்தை முன்னிட்டு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

தமிழக ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக சென்னை போர் நினைவிடத்தில் ஆளுநர் பன்வாரிலால் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து காந்தியடிகள் காவலர் விருதுகள், அண்ணா விருதுகள், வேளாண் துறை சிறப்பு விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் மாநிலம் முழுவது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி