ஆப்நகரம்

களமிறங்கிய தமிழக ஆளுநர்.!அதிச்சியில் அரசியல் தலைவர்கள்.!

களத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் அரசை பாராட்ட முடியும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

TNN 15 Nov 2017, 10:59 am
களத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் அரசை பாராட்ட முடியும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.
Samayam Tamil tamilnadu governor banwarilal purohit visits coiambatore
களமிறங்கிய தமிழக ஆளுநர்.!அதிச்சியில் அரசியல் தலைவர்கள்.!


தமிழக ஆளுநர் பன்வாரிலால் நேற்று திடீரென கோவை மாவட்ட ஆட்சியர், கமிஷனர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிமுக, பாஜகவினர் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று கோவையில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால், முதலில் கோவை பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயோ டாய்லெட் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். பின்னர், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றினார். கோவை காந்திபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பார்வையிட்டார்.

இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவை நகருக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்மார் நகரத்தில் கோவையும் தேர்வெ செய்யப்பட்டிருப்பதால் இனி கொங்கு தமிழுடன் சேர்ந்து கோவையும் வேகமாக வளரும். தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், களத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் அரசை பாராட்ட முடியும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார். புதுவை ஆளுநர் கிரண்பேடியைப் போல, அரசு நிர்வாகத்தில் தலையிடும் பன்வாரிலால் முயற்சிக்கு தமிழக அரசியலில், தொடர்ந்து எதிர்ப்பு நீடிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி