ஆப்நகரம்

கொரோனா நிவாரணம் ரூ.50,000.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் கொரோனா நிவாரணத் தொகை 50,000 ரூபாய் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Samayam Tamil 7 Dec 2021, 11:08 pm
கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
Samayam Tamil Cash


இதற்கான அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது. மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தினசரி பாதிப்பில் சென்னையை விஞ்சிய கோவை!
இந்த இணையதளத்தில் உள்ள “வாட்ஸ் நியூ (what's new) பகுதியில் “Ex-Gratia for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி