ஆப்நகரம்

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் குழுக்கள்!!

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 20 Jul 2018, 5:37 am
சென்னை: சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
Samayam Tamil சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் குழுக்கள்!!
சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் குழுக்கள்!!


கலப்புத் திருமணம் செய்து கொண்ட உசிலம்பட்டி விமலா தேவி, ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கலப்புத் திர்மானம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க தமிழக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கியது.

ஆனால், அந்த அறிவுரைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர், சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்க மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக அரசு மேற்கொண்டுள்ள பிற நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். இதையடுத்து, நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி