ஆப்நகரம்

அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட அனுமதி!

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் இருப்பதை முன்னதாகவே நடைமுறைப்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!

Samayam Tamil 20 Sep 2019, 11:06 am
அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட அனுமதி!
அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட அனுமதி!


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; அரசுப் பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், அதற்கான அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு புகார்கள் வருகின்றன.

இதைத் தவிர்க்க தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் தலைமை ஆசிரியர்களே இனி முடிவு செய்து கொள்ளலாம்.

போர் அகதிகள் தெரியும்..அதென்ன நீர் அகதிகள்?? : பீதியை கிளப்பும் வாட்டர்மேன்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் புத்தாக்கப் பயிற்சி, கற்றல் உபகரணங்கள் வழங்குதல், தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல், விளையாட்டுப் பயிற்சி, சுகாதார பரிசோதனை உட்பட பணிகளை மேற்கொள்ள அணுகும் தொண்டு நிறுவனங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை முதன்மைக் கல்வி அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும்.

அதேநேரம் பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளால் அன்றாட கற்பித்தல் நிகழ்வுகள், தேர்வுப் பணி, மாணவர் உடல்நலம் ஆகியவை பாதிக்கக்கூடாது. இந்த பணிகளின்போது அரசு அனுமதித்த கற்பித்தல் உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தீபாவளிக்கு 10,940 சிறப்பு பேருந்துகள் இயக்கம்- அக்டோபர் 23-ல் முன்பதிவு துவக்கம்!

இதே நடைமுறைகள் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் தனியார் நிறுவனங்கள் பள்ளிகளில் மேற்கொள்ளும் பணிகளுக்கும் பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் கூறுகையில், தமிழக அரசின் சமீப கால செயல்பாடுகள் அரசுப் பள்ளிகளை அழிவுப்பாதையை நோக்கி செல்லும்விதமாக உள்ளன. கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தினால் மாணவர்கள் கற்றல் திறன் பாதிக்கப்படும்.

சரிகிறதா சரவணா பவன் ஓட்டல் சாம்ராஜ்யம்?!!

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் இருப்பதை, முன்னதாகவே அமல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டுவது ஏற்புடையதல்ல என்று கூறினார்.

அடுத்த செய்தி