ஆப்நகரம்

முடங்கிய தமிழக அரசு: ஆளுநரிடம் முறையிட்ட மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு முடங்கியுள்ளது என்று ஆளுநரைச் சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

TNN 10 Feb 2017, 8:38 pm
சென்னை: தமிழக அரசு முடங்கியுள்ளது என்று ஆளுநரைச் சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Samayam Tamil tamilnadu is not working perfectly says mk stalin
முடங்கிய தமிழக அரசு: ஆளுநரிடம் முறையிட்ட மு.க.ஸ்டாலின்


தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம் காரணமாக, முதலமைச்சர் குறித்து குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். நடப்பு அரசியல் குழப்பம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது தேர்தல் முடிந்து இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும், தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தமிழகத்தை பொறுத்தவரை அரசு முடங்கி போயுள்ளது என்று குறிப்பிட்டார். அரசியல் சாசன அடிப்படையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் சசிகலாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

Tamilnadu is not working perfectly says MK Stalin.

அடுத்த செய்தி