ஆப்நகரம்

டிசம்பரில் கனமழை காத்திருக்கிறது: ரமணன் உறுதி

தமிழகத்தில் டிசம்பர் மாதம் கனமழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

TNN 27 Nov 2016, 1:32 am
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாதம் கனமழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilnadu monsoon season may begin in early december says s r ramanan
டிசம்பரில் கனமழை காத்திருக்கிறது: ரமணன் உறுதி


தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் டிசம்பர் 2ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பின்பு தமிழ்நாட்டில் கனமழை வரலாம் என்று சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் என்று எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கணினி சார்ந்த கணிப்புகளை வைத்து பார்க்கும்போது டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மழை வரக்கூடும் என்றும் நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 10 செ.மீ. வரையும் மற்ற உள் மாவட்டங்களில் 2 செ.மீ. வரையும் மழை பெய்லாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரமணன் சொன்ன வானிலை அறிக்கை சொன்னபடியே பலித்துவிட்டது. இப்போது, டிசம்பரில் மழைக்கு வாய்ப்புண்டு என்று அவர் கூறியுள்ளார். அண்மையில், ஆற்காடு பஞ்சாங்கத்திலும் டிசம்பர் மாதம் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டிருப்பதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary

Tamilnadu monsoon season may begin in early December says S.R.Ramanan

அடுத்த செய்தி