ஆப்நகரம்

தமிழ்நாட்டுக்கு எதுக்கு வந்தீங்க... ஜம்மு -காஷ்மீர் இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை!!

தமிழகத்துக்கு திடீரென வந்துள்ள ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரிடம் போலீஸார் ஐந்து மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர்.

Samayam Tamil 21 Jan 2020, 8:39 pm
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் ஸபீக், அகமது பீர் ஆகியோர், சென்னையில் கடந்த 20 நாட்களாக தங்கியிருந்து, தங்கள் பகுதியில் தாங்கள் பணியாற்றும் பள்ளிக்கூடத்திற்கு நிதி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil தமிழ்நாட்டுக்கு எதுக்கு வந்தீங்க... ஜம்மு -காஷ்மீர் இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை


இதனையடுத்து இன்று காலை, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிக்கு வந்தவர்கள் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து விடுதி உரிமையாளர் இவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தங்கும் விடுதிக்கு இரண்டு நபர்களிடமும் போலீசார், உளவுத்துறை, கியூபிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

காஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்; எதற்காக? மோடி அப்படியென்ன அட்வைஸ் கொடுத்தார்!

இரண்டு நபர்களும் தமிழகம், பல்வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடும் எனவும், வேறு ஏதேனும் நோக்கத்தில் வந்திருப்பதாக இருக்கலாம் என்ற கோணத்திலும் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் இரண்டு நபர்களும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் ஆசிரியர் பணி செய்து வருவது தெரிய வந்தது.

மேலும், அங்கு உள்ள பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதி பெறுவதற்கு பணம் மற்றும் பொருட்களை பெறுவதற்காக, சென்னை வந்ததாகவும் விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்க போலீஸ் ஸ்டேஷன் போகனுமாம்: எங்க தெரியுமா?

இதனையடுத்து அவர்கள் குறித்த முழுவிபரங்களையும் பெற்ற போலீஸார், இவர்கள் குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை எனத்தெரிவித்ததோடு இவர்கள் சொந்த மாநிலத்திற்கோ அல்லது வேறு பகுதிக்கோ செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்னும் நிபந்தனையுடன் அனுப்பி வைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி