ஆப்நகரம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவிற்கு நிவாரணப் பொருட்களை வாரி வழங்கும் தமிழகம்!

கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை தமிழக மக்கள் அனுப்பி வருகின்றனர்.

Samayam Tamil 18 Aug 2018, 12:59 pm
மதுரை: கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை தமிழக மக்கள் அனுப்பி வருகின்றனர்.
Samayam Tamil k1


கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 14 மாவட்ட மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி ஊருக்கு தண்ணீர் புகுந்ததால், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எர்ணாகுளத்தில் மட்டும் 416 முகாம்களில் 41,093 குடும்பங்களைச் சேர்ந்த 1,42,022 பேர் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் திருச்சி கோட்டத்தில் இருந்து 3,050 பெட்ஷீட்கள் மற்றும் 30 பிளாங்கட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரியில் இருந்து குடிநீர், உடைகள், அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.


Tamilnadu sends more relief material for Kerala flood affected people.

அடுத்த செய்தி