ஆப்நகரம்

பயணிகளிடம் ரூ. 2000 நோட்டு பெறக்கூடாதா? அரசு போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு!

அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டுக்களை பெற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பயணிகள் கொடுக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 23 May 2023, 9:31 am
Samayam Tamil Transport 2000 Rs

செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை மாற்றி கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு கொள்கை தோல்வி அடைந்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனை தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை என்றும் அவை திரும்பப் பெறப்படுகின்றன என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
Tirupati: வார இறுதி நாளில் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்.. 4 கிமீ தொலைவுக்கு நின்ற பக்தர்கள்!
மேலும் 2000 நோட்டுக்களை மாற்ற வேண்டியவர்கள் வங்கிகளில் 23 ஆம் தேதியான இன்று முதல் மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்தலையில், அந்த அறிவிப்பை போக்குவரத்துத்துறை திரும்ப பெற்றுள்ளது. அரசு பஸ்களில் பயணிகள் தரும் 2,000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பயணிகள் தவிர வெளிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதியில்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Esther Anil: படு மாடர்னாக மாறிய பாபநாசம் பட பாப்பா... மிரட்டல் போட்டோஸ்!

முன்னதாக அரசு மதுபானக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை பெற வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த தகவலை மறுத்தார். அது முற்றிலும் தவறான செய்தி என விளக்கம் அளித்திருந்தார்.

இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் இனி ஒரே நேரத்தில் ரூ.2000 நோட்டுகளை வங்கிக்குச் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அச்சச்சோ.. நாளைக்கு அது இல்லையாம்... மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு... CSK ரசிகர்கள் அதிர்ச்சி!
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி