ஆப்நகரம்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவிப்பு! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட பேருந்துகள்!!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவிப்பு! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட பேருந்துகள்!!

TOI Contributor 14 May 2017, 6:09 pm
திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்ததை அடுத்து சென்னையி்ல ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil tamilnadu transport strike begins
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவிப்பு! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட பேருந்துகள்!!


ஊதிய உயர்வு, தொழிலாளர்களின் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன. மொத்தம் உள்ள 47 தொழிற்சங்கங்கள் உடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். அதன்பின்னர் மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் நாளை முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் உறுதிபட தெரிவித்தனர்.

இதனையடுத்து சென்னையில் இயங்கிக்கொண்டிருந்த பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை பல்லவன் பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அடுத்த செய்தி