ஆப்நகரம்

2020ம் ஆண்டு தமிழகம் தொழில் வளர்ச்சி காணும்- முதல்வர்

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் பழனிசாமி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அரசின் திட்டங்கள், எதிர்கால நோக்கம், இந்த மாநாட்டின் மூலமாக ஏற்படவுள்ள நன்மைகள் குறித்து அவர் பேசியுள்ளார்.

Samayam Tamil 23 Jan 2019, 12:39 pm
உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் பழனிசாமி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அரசின் திட்டங்கள், எதிர்கால நோக்கம், இந்த மாநாட்டின் மூலமாக ஏற்படவுள்ள நன்மைகள் குறித்து அவர் பேசியுள்ளார்.
Samayam Tamil eps

தமிழ்நாடு 2020 வளர்ச்சியே புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் கனவு. மாநில அளவிலான வரி சீர்திருத்தம் கொண்டுவந்தவர் ஜெ., ஃபிரான்ஸ், யூகே, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளன. உலகம் முழுக்க உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களால் 2 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் வருங்காலத்தில் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகம் அதிவேகத்தில் தொழில் வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழகத்தில் தொழில் துவங்க தமிழக அரசு அனைத்து வித ஒத்துழைப்பையும் அளிக்கும். புதிய முதலீட்டாளர்கள் வருங்காலங்களில் அதிக அளவில் தமிழகத்தில் தொழில் தொடங்க வருவர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு முதல்வர் பேசினார். திறமையான தொழிலாளர்களைக் கொண்ட முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என உலக முதலீட்டாளர் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுயுள்ளார்.

அடுத்த செய்தி