ஆப்நகரம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை உண்டு; எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 3 Nov 2017, 1:10 pm
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamilnadu will get heavy rain in next 2 days
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை உண்டு; எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!


வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் நீரால் நிரம்பி உள்ளன. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகப் பகுதியில் 30செமீ மழை பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் பெய்த தொடர்மழையால், வெளியே வரமுடியாத அளவிற்கு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இன்று காலை முதல் மழை ஓய்ந்துள்ளது. இதனால் தேங்கிய மழை நீரை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

Tamilnadu will get heavy rain in next 2 days.

அடுத்த செய்தி