ஆப்நகரம்

ஒகி புயல்: சேதமடைந்த 3,750 மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்!

ஒகி புயல் காரணமாக சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

TOI Contributor 2 Dec 2017, 11:56 pm
ஒகி புயல் காரணமாக சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil tangedco staff mending damaged electric poles
ஒகி புயல்: சேதமடைந்த 3,750 மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்!


கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒகி புயலாக மாறியது. இதையடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனத்த மழை பெய்தது. தமிழகத்தின் கன்னியாகுமர், நெல்லை, தூத்துக்குடி உள்பட பல தென் மாவட்டங்கள் ஒகி புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. மேலும், கன்னியாகுமரியில் அதிக வேகத்துடன் அடித்த காற்றால் மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து பேசிய தமிழக முதல்வர் கூறுகையில், கன்னியாகுமரியில் ஒகி புயல் காரணமாக3,750க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், அவற்றை சீரமைப்பதற்காக 2000க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து அங்கு சேதமடைந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, கன்னியாகுமரி பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tangedco staff mending damaged electric poles. Damaged bund of a tank resulted in mud filling the near by agricultural lands.

அடுத்த செய்தி