ஆப்நகரம்

பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரம்: நாளை பதில் மனு தாக்கல்...

தமிழ் ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். ஆனால் சமஸ்கிருதமும் பயன்படுத்தப்படட்டும்

Samayam Tamil 28 Jan 2020, 3:10 pm
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்க நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார் தஞ்சை பெருவுடையார்.
Samayam Tamil thanjavur-big-temple-kumbabishekam


எந்த மொழியில் செய்தாலும் இறைவன் அதுபற்றிக் கவலைப்படப்போவதில்லை என்பதை எல்லா அமைப்புகளும் ஒப்புக்கொண்டாலும், வழிபாட்டு மொழியாக தங்கள் விருப்பத்துக்குரிய மொழி இருக்க வேண்டும் என்ற மன எண்ணம், இந்த விவகாரத்தில் ஏதாவது ஒரு மொழியின் பக்கம் அமைப்புகளை சார்பெடுக்க வைக்கிறது.

இதன் விளைவாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று இறுதிக்கட்ட விசாரணை நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. இன்று தொடங்கிய விசாரணையின்போது தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட கும்பாபிஷேகத்தின்போது தீவிபத்து ஏற்பட்டு சேதம் நிகழ்ந்தது. இதனையடுத்து தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும் இந்த கும்பாபிஷேகத்தை தடை செய்ய வேண்டும் என்று சரவணன் என்பவர் தொடர்ந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூடாது: உயர்நீதிமன்றம்

ஆனால், தொல்லியல் துறையின் அனுமதியுடன் தான் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.


இத்துடன் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், தமிழ் ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். ஆனால் சமஸ்கிருதமும் பயன்படுத்தப்படட்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

நாளையே இந்த வாத பிரதிவாதங்களை தொகுத்து பதில் மனுவாக தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளை இறுதிக் கட்ட முடிவை எதிர்பார்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அடுத்த செய்தி