ஆப்நகரம்

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்ட அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டள்ளன.

Samayam Tamil 5 Feb 2017, 10:58 am
மதுரை: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டள்ளன.
Samayam Tamil tasmac shops closed in avaniyapuram
டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்ட அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை விலக்க, தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இச்சட்டம் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெற்றதும் அதிகாரப்பூர்வமான சட்டமானது. இதனையடுத்து அரசிதழில் ஜல்லிக்கட்டு சட்டம் வெளியிடப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு தடை முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்ட நிலையில், பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி