ஆப்நகரம்

நாமக்கல் நீட் பயிற்சி மையத்தில் ஐ.டி. ரைடு.! 150 கோடி வரை வரி ஏய்ப்பு..

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் வருமான வரி சோதனையில் நாமக்கல் நீட் பயிற்சி மையத்தில் கணக்கில் வராத 30 கோடி ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Oct 2019, 6:13 pm
நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனையிட்டு வரும் நிலையில் நேற்று கர்நாடகாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் 100 கோடி ரூபாய் கருப்பு பணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
Samayam Tamil 77


தமிழகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை வேட்டையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக சென்னை, பெருந்துறை, கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தியது. இதில் நீட் நுழைவு தேர்வுக்காக மாணவர்களிடம் பெறப்படும் தொகை, எம்.பி.பி.எஸ் சீட்டிற்காக பெறப்படும் தொகை ஆகியவற்றை முறையான பதிவேடு இல்லாமல் பெறப்பட்டு வரி ஏய்ப்பு செய்ததன் விளைவாக நாமக்கல் கல்வி மையம் ஒன்றில் 30 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 17 நீட் பயிற்சி மையங்களில் நடந்து வரும் இந்த சோதனையில் நாமக்கல் மையம் லாவகமாக சிக்கியுள்ளது. 30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் 150 கோடி ரூபாய் வரைக்கும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று கர்நாடகாவில் நடைபெற்ற சோதனையில் முன்னாள் துணை முதல்வரான பரமேஸ்வராக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடைபெற்று 8 .82 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் கல்வி மையங்களில் நடத்திய சோதனையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அடுத்த செய்தி