ஆப்நகரம்

டீ கடைகளுக்கு அனுமதி இல்லை - டீ பிரியர்கள் கவலை!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் டீ கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jun 2021, 8:18 pm
கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-6-2011 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில் , நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும் நோய்த் தொற்று பரவாமல் தடுத்து , மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும் , இந்த முழு ஊரடங்கு 14-6-20 : 21 முதல் 21-6-20021 காலை 6-00 மணி வரை , மேலும் ஒரு வார காயத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


குறிப்பாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தளர்வுகள் கிடையாது. இந்த மாவட்டங்களை தவிர ஏனைய 27 மாவட்டங்களில் டாஸ்மாக், சலூன், அழகு நிலையங்கள் ஆகியவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தளர்வுகளில் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படாதது டீ பிரியர்களுக்கு இடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களிலாவது டீ கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடைகளை நடத்தியிருப்போம் என்று கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முழு ஊரடங்கு நீட்டிப்பு: 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்பு..!

குறைந்தபட்சம் பார்சல் முறைக்காவது அரசு அனுமதி வழங்கி டீ கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அடுத்த செய்தி