ஆப்நகரம்

மூன்றாவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள், தொடர்ந்து மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 26 Jan 2017, 6:44 pm
வேலூர்: தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள், தொடர்ந்து மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil tel employees sit in protest continues third day
மூன்றாவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு கடந்த 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், நிலுவையில் உள்ள கடந்த 6 மாதகால ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என கோரி உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஊதிய பணம் முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் போராட்டத்தை நிறுத்தி வைத்தோம். ஆனால் பொங்கல் பண்டிகை முடிந்தும் ஊதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் இல்லாததால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, 6 மாத ஊதியத்தை வழங்கும் வரை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திட்டவட்டம் தெரிவித்துள்ளனர்.
TEL employees Sit in protest continues third day

அடுத்த செய்தி