ஆப்நகரம்

சம்மர் முடிஞ்சிடுச்சின்னு யார் சொன்னது? -பத்து இடங்களில் இன்று சுட்டெரித்த வெயில்!!

திருத்தணி, கடலூர், மதுரை விமான நிலையம் உள்ளிட்ட பத்து இடங்களில் இன்று வெயில் சதமடித்துள்ளது.

Samayam Tamil 15 Jun 2020, 7:37 pm
தமிழகத்தில் கோடை காலத்தின் உச்சமாக கருத்தப்படும் அக்னி நட்சத்திரம் எனும் 'கத்திரி வெயில்' காலம் மே மாதம் இறுதியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது.
Samayam Tamil weather


இதன் காரணமாக, தெற்கு, தென்மேற்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அவ்வபோது லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தனிந்திருந்த வெயிலின் தாக்கம் கடந்த சில தினங்களாக மீண்டும் கூடியுள்ளது.

10 இடங்களில் சதம்: திருத்தணி, வேலூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை விமான நிலையம், நாகை, கடலூர், பரங்கிப்பேட்டை, சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி இன்று வெயில் பதிவானது.

அடுத்த ரெண்டு நாள்ல இங்கெல்லாம் மழை பெய்யுமாம்!!

அதிகபட்சமாக திருத்தணியில் 106 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும்” சென்னை விஞ்ஞானி!

மத்திய கிழக்கு, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த நான்கு நாட்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி