ஆப்நகரம்

தருமபுரியில் மழை வேண்டி சிவாச்சாரியர்கள் தண்ணீரில் அமர்ந்து சிறப்பு யாகம்!!

தருமபுரி குமாரசுவாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மழை வேண்டி சிவாச்சாரியர்கள் தண்ணீரில் அமர்ந்து சிறப்பு யாகம் செய்தனர்.

Samayam Tamil 22 May 2019, 3:19 pm
தருமபுரி குமாரசுவாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மழை வேண்டி சிவாச்சாரியர்கள் தண்ணீரில் அமர்ந்து சிறப்பு யாகம் செய்தனர்.
Samayam Tamil மழை வேண்டி சிவாச்சாரியர்கள் தண்ணீரில் அமர்ந்து சிறப்பு யாகம்!
மழை வேண்டி சிவாச்சாரியர்கள் தண்ணீரில் அமர்ந்து சிறப்பு யாகம்!


மழை வேண்டி தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோயில்களில் சிறப்பு பூஜை, யாகம் செய்ய வேண்டும் என்று அந்த துறை சமீபத்தில் கேட்டுக் கொண்டது. அதன்படி மாநிலத்தில் இருக்கும் பல்வேறு கோயிகளில் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மழை வேண்டி தருமபுரியில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயிகளில் கடந்த சில நாட்களாக இந்து அறநிலைத்துறை சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று இந்து அறநிலைத்துறை சார்பில் தருமபுரி குமாரசுவாமிப்பேட்டையில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலை முதல் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வருண பகவானை போற்றும் வகையில் 4 சிவாச்சாரியர்கள் தண்ணீர் தொட்டியில் இறங்கி 108 முறை பாராயணம்பாடியும் பல்வேறு மந்திரங்கள் சொல்லியும் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஏராளானமான பகதர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி