ஆப்நகரம்

பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: அலுவலர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு

தமிழகத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 25 Oct 2021, 7:56 pm
தமிழக அரசின் கல்வித் துறை 3 வெவ்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது: அவற்றில் நிர்வாக நோக்கங்களுக்காக 38 வருவாய் மாவட்டங்களும், 120 கல்வி மாவட்டங்களும் அடக்கம். இதன்படி, மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த பிரிவுகளின் தலைவராக செயல்படுவார்கள். அவர்களது தலைமையில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பொது இடமாற்றம் குறித்த ஆலோசனையும் நடைமுறையில் இருந்து வருகிறது.
Samayam Tamil தலைமை செயலகம்


இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, நிர்வாக நலன் கருதி பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேலும், 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.

ஆணை:

தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் வகுப்பு-lllஐ சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி ஆணையிடுகிறது.


* ஆர். திருவளர்செல்வி, துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை - முதன்மை கல்வி அலுவலர் காஞ்சிபுரம்.

* அ. ஞானகௌரி நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் - முதன்மை கல்வி அலுவலர் விருதுநகர்.

* அ. பாலமுத்து, முதன்மை கல்வி அலுவலர், நாமக்கல் - முதன்மை கல்வி அலுவலர் ராமநாதபுரம்.

* எஸ். அருள்செல்வம், முதன்மை கல்வி அலுவலர் காஞ்சிபுரம் - முதன்மை கல்வி அலுவலர் திருவண்ணாமலை

* ஆ. அனிதா, முதன்மை கல்வி அலுவலர், ராணிப்பேட்டை - துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை

* பி. மகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர், விருதுநகர் - முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல்

* எம்.கே.சி. சுபாஷினி, முதன்மை கல்வி அலுவலர், ராமநாதபுரம் - முதன்மை கல்வி அலுவலர், திருநெல்வேலி

* ஆர். பூபதி, முதன்மை கல்வி அலுவலர், திருவண்ணாமலை - முதன்மை கல்வி அலுவலர் கடலூர்

* சி. முத்துகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலர், திருநெல்வேலி - நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மகாராஜா நூலகம் மற்றும் ஆய்வு மையம்

* ப. உஷா, துணை இயக்குனர் (சட்டம்) தொடக்கப்பள்ளி கல்வி இயக்ககம், சென்னை - முதன்மை கல்வி அலுவலர், ராணிப்பேட்டை

அடுத்த செய்தி