ஆப்நகரம்

கூம்பு ஒலிப்பெருக்கியை அகற்றும் உத்தரவு; கொடைக்கானலில் பரபரப்பு

மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை அடுத்து மதவழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கி குழாய்களை அகற்றும் முயற்சியில் காவல்துறையினரும் வருவாய் துறையினரும் ஈடுபட்டதால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 7 Feb 2019, 5:34 pm
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை அடுத்து மதவழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கி குழாய்களை அகற்றும் முயற்சியில் காவல்துறையினரும் வருவாய் துறையினரும் ஈடுபட்டதால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil cone Loudspeaker


நாடுமுழுவதும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்க்பட்டுள்ளது, அதனைதொடர்ந்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள வழிபாட்டுதலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் உள்ளதை அகற்றவேண்டுமென தனியார் ஒருவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் உள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றி அதுகுறித்து வரும் 13-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது, இதனை அடுத்து இன்று காலை கோட்டாட்சியர் பொறுப்பு சிவக்குமார், தாசில்தார் ரமேஷ், டி.எஸ்.பி. பொன்னுச்சாமி ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினரும் காவல்துறையினரும் நகரில் உள்ள மும்மத வழிபாட்டு தலங்களுக்கு சென்று கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என கூறினர்.

ஆனால் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இதற்கான கால அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டனர், இதனை அடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் 13-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதால் அதற்கு முன்பாக குழாய்களை அகற்ற வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர், இதனால் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோட்டாட்சியர் சிவகுமாரிடம் கேட்டபோது உயர்நீதிமன்ற உத்தரவின்படியும் ஒலி மாசு கட்டுப்பாடு சட்டத்தின் படியும் கூம்புவடிவ குழாய்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது, இதற்கு மும்மத தலைவர்களும் கால அவகாசம் கேட்டதின் அடிப்படையில் வரும் சனிக்கிழமைவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது அகற்றாத பட்சத்தில் காவல்துறையினருடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

அடுத்த செய்தி