ஆப்நகரம்

சசிகலாவுக்கு RT-PCR சோதனை..! தொடர் மருத்துவ சிகிச்சை தேவை

சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Jan 2021, 1:04 pm
உடல் நலக்குறைவால் பெங்களூரு பவ்ரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற 27ஆம் தேதியன்று விடுதலையாவார் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
Samayam Tamil file pic


அதனை தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சசிகலா பவ்ரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதற்கட்ட பரிசோதனையில் உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவற்றுடன் ஒருவார கால இருமல், காய்ச்சலும் இருந்தது தெரிய வந்தது. மேலும், சசிகலாவின் உடலில் 79 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினார்.

தொடர்ந்து அவருக்கு RAPID பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் நெகட்டிவ் என வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பவ்ரிங் மருத்துவமனை மருத்துவர் மனோஜ் கூறுகையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தொடர்ந்து மருத்துவ சிகிச்கைகள் தேவைப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

சசிகலா சிகிச்சையில் மர்மம்; வெடிக்கும் புதிய சர்ச்சை!

சசிகலா விடுதலையாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படை தன்மை வேண்டும் என தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் டி. கணேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 12 மணி நேரமாகியும் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை என வரும் தகவல் அதிர்ச்சியையும் வியப்பையும் அளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், வரும் 27ஆம் தேதி விடுதலையாகி தமிழகம் வரவுள்ள நிலையில் அவரது உடல் நிலையில் சிறைத்துறை கவனம் செலுத்தாது வேதனை அளிக்கிறது. கடந்த 7 நாட்களாக அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்தும் அதனை அவரது உறவினர்கள், வழக்கறிஞர்களிடம் தெரிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி