ஆப்நகரம்

அதிமுக கூட்டணியில் இருந்த விலகினார் தமிமுன் அன்சாரி

கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடு எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தனர். இவர்களில் தமிமுன் அன்சாரி மட்டும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளார்.

Samayam Tamil 19 Feb 2019, 6:05 pm
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
Samayam Tamil thameen_ansari_14567


அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த மனிதநேய ஜனநாயகக் கட்சி திடீரென் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலளார் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் அதிமுகவின் பிற தோழமை கட்சியாக இருந்தன.

இக்கட்சிகளைச் சேர்ந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடு எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தனர். இவர்களில் தமிமுன் அன்சாரி மட்டும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளார்.

கருணாஸ் இந்த அரசின் ஐந்து ஆண்டு ஆட்சி முடியும் வரை தனது ஆதரவு இருக்கும் என அண்மையில் அறிவித்தார்.

அடுத்த செய்தி