ஆப்நகரம்

ரூ.75,000 லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஆணையரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது.

TNN 19 Jan 2018, 4:18 pm
தஞ்சை: லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஆணையரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது.
Samayam Tamil thanjavur corporation commissioner m varatharaj for accepting a bribe
ரூ.75,000 லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!


தஞ்சை கீழவஸ்தாசாவடி பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம். இவர் வாங்கிய காலி மனைக்கு பொட்டல் வரி நிர்ணயம் செய்வது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளை அணுகியுள்ளார்.

அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்துள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் இடைத்தரகராக செயல்படும் நாகராஜன், சம்பந்தத்தை அணுகினார்.

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால், பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் வரதராஜனை நேரில் சந்தித்துள்ளார்.

அவர் ரூ.1 லட்சம் கேட்ட நிலையில், ரூ.75,000 தருவதாக சம்மந்தம் கூறியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரிடம் சம்மந்தம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், வரதராஜனையும், இடைத்தரகர் நாகராஜனையும் கைது செய்தனர்.

DVAC police arrested Thanjavur corporation commissioner M Varatharaj for accepting a bribe of Rs 75,000 from a person for reducing the tax on a vacant plot today.

அடுத்த செய்தி