ஆப்நகரம்

Obc Reservation : வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது எல்லாம் அப்போ... இப்போ கதையே வேற

மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 30 Jul 2021, 4:45 pm
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்களை மத்தியத் தொகுப்புக்கு மத்திய அரசு எடுத்துக்கொண்டதாக சுட்டிக்காட்டி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன.
Samayam Tamil கோப்புப்படம்


அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (OBC) 50% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2020 அன்று அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை இருக்கிறது என்று தீர்ப்பளித்தது.

அதனை அமல்படுத்தக்கோரி அண்மையில் டெல்லிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார். மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மத்திய சுகாதார துறையிடம் இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டுக்கவில்லை என்று அவமதிப்பு வழக்கும் திமுக தொடர்ந்தது.

இதற்கு மத்தியில் மாநிலங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு வழங்கும் தொகுப்பிற்கு அளிக்கும் 15% மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளங்கலை இடங்களிலும், 50% முதுநிலை மருத்துவ இடங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு என்று ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது.

மக்களவை மாஸ்க்கில் 'மர்மம்': குரலை தடுக்க பலே திட்டம், கவலையில் எதிர்க்கட்சி எம்பி

இந்த அறிவிப்பை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், இது தமிழ்நாட்டுக்கும், திமுகவின் சமூக நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறினார். இதனை தொடர்ந்து, தமிழகத்தின் அழுத்தத்தால் ஒட்டுமொத்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் நீதி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள் #ThankYouMKStalin என்ற ஹாஷ் டேகை டிவிட்டரில் டிரெண்ட் செய்துள்ளனர்.

மேலும், ' வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்று முழங்கியது ஒருகாலம். இன்று வடக்கில் வாழும் பிற்படுத்தப்பட்டவர்களையும் வாழ வைத்திருக்கிறது தெற்கு என்று மார் தட்டுகின்றனர்.

அடுத்த செய்தி