ஆப்நகரம்

அரசு ஊழியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: சிவகாமி பேட்டி!

அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது கண்டிக்கதக்கது என டாக்டர் சிவகாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 28 Jan 2019, 2:08 pm
கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என டாக்டர் சிவகாமி கூறியுள்ளார்.
Samayam Tamil அரசு ஊழியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: சிவகாமி பேட்டி!
அரசு ஊழியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: சிவகாமி பேட்டி!


வேலூர் மாவட்டம், ஆசிரியர் இல்லத்தி, சமூகப்பணியில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நிறுவனதலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் டாக்டர் சிவகாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்; அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது கண்டிக்கதக்கது.

கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துடன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை கல்வித்துறையுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

மாநிலம் முழுவதும் 8 ஆயிரம் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் கிராமப்புற நூலகர் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதியதாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை அரசு நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும் 10 சதவிகித உயர் வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சட்ட சிக்கல்களும் நடைமுறை சிக்கல்களும் ஏற்படும். இது பாஜக அரசின் தேர்தல் கால நடவடிக்கையாக தான் கருதப்படுகிறது

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் சி.பி,ஐ விசாரணை தேவை அல்லது நீதிமன்றமே குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

அடுத்த செய்தி