ஆப்நகரம்

தேசிய ஃபேஷன் டெக்னாலஜி: அனிதா மாபெல் மீதான வழக்கு ரத்து!

தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய வளாக இயக்குனர் அனிதா மாபெல் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Aug 2022, 7:07 am
தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய வளாக இயக்குனர் அனிதா மாபெல் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil nift


சென்னை தரமணியில் உள்ள தேசிய ஃபேசன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 2013ம் ஆண்டு முதல் நிர்வாகம் மற்றும் கொள்முதல் பிரிவில் மூத்த உதவி இயக்குனராக பணியாற்றியவர் இளஞ்செழியன். இவர் கட்டிடப்பிரிவு உதவி இயக்குராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, சாதி அடிப்படையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும், பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் கூறி இளஞ்செழியன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை தேசிய ஃபேஷன் டெக்னாலஜி மைய வளாக இயக்குனர் அனிதா மாபெல் மனோகர் மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு... திமுக, பாஜகவுக்கு சாதகமா, பாதகமா?
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அனிதா மாபெல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி