ஆப்நகரம்

சாதிய மடமைகளைத் தகர்க்கும் இசைக்குழு

பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழு சமூக ஏற்ற தாழ்வுகளைத் தகர்த்து தமிழகத்தின் பல இடங்களில் பறை இசை கச்சேரி நடத்தி வருகிறது.

Samayam Tamil 25 Jun 2019, 3:41 pm
தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் (The Casteless Collective) குழு சமூக ஏற்ற தாழ்வுகளைத் தகர்த்து தமிழகத்தின் பல இடங்களில் பறை இசை கச்சேரி நடத்தி வருகிறது.
Samayam Tamil caste


பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது.

பேசுவதை இசைக்க உதவும் தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய் பறை எனப்படுகிறது.

தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்.

தமிழர் வாழ்வியலின் முகம் என வர்ணிக்கப்படுகிறது பறை. பறை ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார்.

தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் (The Casteless Collective) குழு சமூக ஏற்ற தாழ்வுகளைத் தகர்த்து தமிழகத்தின் பல இடங்களில் பறை இசை கச்சேரி நடத்தி வருகிறது. இவர்களது ஆல்பத்தில் வெளியான ’காலு ரூபாய் துட்டு’ என்ற பாடல் மிகப் பிரபலமானது. இயக்குநர் ரஞ்சித் இந்த குழுவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

தீண்டாமை போன்ற கொடிய பழக்கங்கள் இந்த நவநாகரிக உலகிலும் இருந்துவருகிறது என்கிறார் ராப் பாடகர் அறிவு. இவர் தலைமையில் நடக்கும் பறை இசையும் மேலைநாட்டு ராப் இசையும் சங்கமிக்கும் கச்சேரிக்கு சென்னையில் தனி ரசிகர்கள் உள்ளனர்.

இவர் கூறுகையில் ‘சாதிய அடுக்கு அடுத்தடுத்த தலைமுறை பாதிக்கும். காலா காலமாக மனித கழிவு அள்ளும் தொழிலில் இருந்தவர்கள் தற்போது அதனை படித்து முன்னேறி வருகின்றனர்.

சமுதாயத்தில் எவ்வளவு முன்னுக்கு வந்தாலும் சாதி, உருவம், நிறத்தை வைத்து பாகுபாடு பார்க்கும் அவல நிலை மாறவேண்டும். சமூக கருத்துகளை பாடல்மூலம் சொல்வதால் பறை இசை கலையும் அழியாமல் இருக்கும். ஆகவே இந்த புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

அடுத்த செய்தி