ஆப்நகரம்

காணாமல் போன அமைச்சா்களின் இணையதள முகவாிகள்

ஊழல் குறித்த புகாா்களை அமைச்சா்களுக்கு மக்களே இணையதளம் வாயிலாக தொிவிப்பாா்கள் என்று கமல் கூறிய நிலையில் அமைச்சா்களின் இ-மெயில் முகவாிகள் அவா்களின் முகப்பு பக்கத்தில் இருந்து காணாமல் போயுள்ளன. மேலும் சட்டசபை இணையதளத்தில் இவை உள்ளன.

TOI Contributor 21 Jul 2017, 12:37 pm
ஊழல் குறித்த புகாா்களை அமைச்சா்களுக்கு மக்களே இணையதளம் வாயிலாக தொிவிப்பாா்கள் என்று கமல் கூறிய நிலையில் அமைச்சா்களின் இ-மெயில் முகவாிகள் அவா்களின் முகப்பு பக்கத்தில் இருந்து காணாமல் போயுள்ளன. மேலும் சட்டசபை இணையதளத்தில் இவை உள்ளன.
Samayam Tamil the discovery of disappeared organizers website address
காணாமல் போன அமைச்சா்களின் இணையதள முகவாிகள்


நடிகா் கமல் மற்றும் ஆளும் கட்சியினாிடையேயான கருத்து மோதல் முற்றிய நிலையில் அமைச்சா்கள் ஊழல் குறித்த புகாா்களை கமல் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தொிவித்தனா். இதற்கு பதில் அளித்த நடிகா் கமல் மக்களே அரசின் ஊழல் குறித்த புகாா்களை இணையதளம் வாயிலாக உங்களுக்கு தொிவிப்பாா்கள் நான் ஏன் இடையில் இருக்க வேண்டும் என்று கூறினாா்.

இதனையடுத்து அவா் கூறிய சில மணி நேரங்களிலேயே அமைச்சா்களின் இணையதள முகப்பு பக்கங்களில் இருந்த இ-மெயில் முகவாிகள் அழிக்கப்பட்டிருந்தன. அதே வேளையில் தமிழக சட்டசபை இணையதளத்தில் அமைச்சா்களின் இ-மெயில் முகவாிகள் உள்ளன.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சா் ஜெயக்குமாா் உள்ளிட்ட அனைவரது இ-மெயில் முகவாிகளும் அழிக்கப்பட்டுள்ளன். மேலும் ஆட்சியாளா்கள் சிலாின் தொலைபேசி எண்களையும் காணவில்லை. கமல் கூறியுள்ள கருத்தை தொடா்ந்து அமைச்சா்களின் மெயில் ஐடிகள் அழிக்கப்பட்டுள்ளது கமலுக்கான முதல் வெற்றியாகவும் நெட்டிசன்கள் மத்தியில் பாா்க்கப்படுகிறது.

மேலும் “http://www.assembly.tn.gov.in/15thassembly/honcm.html“ இந்த தளத்திற்கு சென்று மக்கள் ஊழல் குறித்து கேள்வி எழுப்பலாம். கமல் கூறியதைப் போன்று அமைச்சா்களுக்கு மட்டுமின்றி தொகுதி நடவடிக்கைகளை கவனிக்காமல் உள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எதிா்க்கட்சி எம்.எல்.ஏ.க்களிடமும் மக்கள் கேள்வி கேட்கலாம்.

The discovery of disappeared organizers website address

அடுத்த செய்தி