ஆப்நகரம்

ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள்: வெடித்த மற்றொரு சர்ச்சை - டிடிவி தினகரன் கண்டனம்!

ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 6 Jun 2023, 3:47 pm
அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் இரண்டு மாத காலமாக ஒப்பந்தப் பணியாளர்களாக ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ttv dhinakaran


இந்த விவகாரம் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் ஒப்பந்தப் பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

செந்தில் பாலாஜி , செஞ்சி மஸ்தான் -அமைச்சர் பதவிக்கு சிக்கலா? ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?

தங்களை ஒப்பந்தம் மூலம் ஆவினில் பணியமர்த்திய நிறுவனம் முறையான சம்பளம் வழங்கவில்லை என சிறார்கள் ஆவின் பண்ணை முன்பு கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தியதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தொழிலாளர் சட்டத்தை மீறி இரண்டு மாதமாக ஐஸ்க்ரீம் தயாரிப்பு பிரிவில் பேக்கேஜிங் (PACKAGING) பணியில் சிறார்களை ஒப்பந்த நிறுவனம் மூலம் ஆவின் நிறுவனம் பணியில் ஈடுபடுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல ஆவின் நிறுவனத்துக்கும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படுவதுடன், இதனை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இணைப்புக்கு நோ சொன்ன சசிகலா, பின்னணியில் திவாகரன்? எட்ட நின்று ரசிக்கும் எடப்பாடி!

மேலும், சிறார்களுக்கு உரிய சம்பளம் வழங்க உத்தரவிடுவதுடன், அவர்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் " என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி