ஆப்நகரம்

பாஜகவை பற்றி தப்பா சொன்னா தமிழகத்தில் யாரும் நம்ப மாட்டாங்க: நிர்மலா சீதாராமன்!

சென்னை: பாஜகவை பற்றிய பொய் பரப்புரை தமிழகத்தில் எடுபடாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Feb 2019, 5:12 pm
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
Samayam Tamil Nirmala Sitharaman


இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் மக்களவை தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி என்பதை தமிழக கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும்.

ரபேல் குற்றச்சாட்டுகள் தேர்தலைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் வைப்பவை. இவையெல்லாம் தமிழகத்தில் எடுபடாது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜி.எஸ்.டி மூலம் மாநிலத்திற்கு நஷ்டம் என்றால், அதைச் சரிகட்டுவது மத்திய அரசு தான்.

எந்தவித நஷ்டமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயத் திட்டங்கள் விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை விளையாட்டு விலங்குகள் அல்லாத பிரிவில் சேர்த்தது யார் எனக் கேள்வி எழுப்பினார். எனவே பொய் பிரச்சாரம் எடுபடாது என்றார்.

அடுத்த செய்தி