ஆப்நகரம்

முதலமைச்சர் வீட்டு பெண் காவலருக்கு கொரோனா? வெளியான அறிவிப்பு...

முதல்வர் பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

Samayam Tamil 7 May 2020, 2:38 pm
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் பழனிச்சாமியின் வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஜெயந்தி என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அப்படியான சம்பவம் ஏதும் நடக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil முதலமைச்சர் வீட்டு பெண் காவலருக்கு கொரோனா


அந்த அறிவிப்பில், சென்னை பாதுகாப்பு காவல் பிரிவைச் சேர்ந்த தலைமை பெண் காவலர் ஜெயந்தி என்பவர் முதல்வர் பழனிசாமி வீட்டில் பணியில் ஈடுபடுத்தவில்லை.

அவர் கிரீன்வேஸ் சாலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரை பணியில் இருந்தார். அதன் பின்னர் அவர் பணியில் இல்லை. பின்னர் மே 3ஆம் தேதி அன்று அந்த பெண் காவலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அங்கு அவருக்கு பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே, மேற்படி பெண் காவலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வந்த செய்திகள் உண்மையில்லை என தெளிவுபடுத்தப்படுகிறது. சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் நோய் தொற்று வராமல் இருக்க அணைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் வெயில், அடிச்சுப் பெய்யும் மழை: உங்க ஊரு லிஸ்டுல இருக்கான்னு பாருங்க!

இதற்கு முன்னாள் வந்த செய்திகளில், அந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியான ஒரு வாரத்துக்கு முன்பே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனாவே இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி