ஆப்நகரம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது: விஜயகாந்த்

ஓபிசி மாணவர்களின் மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதுகுறித்து அறிக்கை

Samayam Tamil 26 Oct 2020, 6:44 pm
மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் 50% இடஒதுக்கீடு வழங்ககோரியிருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்றுவதற்கு அரசு இனியாவது அக்கறையோடு செயல்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
Samayam Tamil file pic


இந்த நிலையில், மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' மருத்துவ மாணவர்களுக்காக அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 15% இடங்களில் நடப்பாண்டில் 50% வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது.

மேக மூட்டத்துக்கு நடுவே நடனமாடி நாற்று நடும் புதுக்கோட்டை விவசாயிகள்..! வீடியோ

இனி வரும் காலங்களில் ஒபிசி பிரிவு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 50% இடஒதுக்கீட்டை ஒபிசி மாணவர்களுக்கு வழங்கும் பட்சத்தில், அனைத்து மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகும். எனவே, இந்த விவகாரத்தில் நீதியரசர்கள் இனி வரும் காலங்களில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி