ஆப்நகரம்

மார்ச் 23-ல் சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு..!

மார்ச் 23-ஆம் தேதி திமுக கொண்டு வந்த சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

TNN 20 Mar 2017, 6:43 pm
மார்ச் 23-ஆம் தேதி திமுக கொண்டு வந்த சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
Samayam Tamil the lack of confidence voting against speaker dhanabal will held on march 23
மார்ச் 23-ல் சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு..!


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சட்டமன்றத்தில் அதிமுக தனது பெரும்பான்மையை நிரூபிக்க கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பானது ரகசிய வாக்கெடுப்பாக நடைபெற வேண்டும் என தமிழக எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த சபாநாயகர் தனபால், பொது வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி திமுக சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பானது கடந்த 16-ஆம் தேதி கூடிய, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் ,இது குறித்து எந்த வித தகவலும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பின் போது சபாநாயகர் சட்டமன்றத்தில் இருக்க மாட்டார். அவருக்கு பதிலாக துணை சபாநாயகர் அவையை நடத்துவார்.

The lack of confidence voting against speaker Dhanabal will held on March 23

அடுத்த செய்தி