ஆப்நகரம்

நீட் தேர்வை கொண்டு வந்ததே ஸ்டாலின்தான்: அமைச்சர் ஜெயக்குமார் நெத்தியடி

நீட் தேர்வுக்கு அடிப்படை காரணமே ஸ்டாலின் தான் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 4 Sep 2017, 8:52 pm
நீட் தேர்வுக்கு அடிப்படை காரணமே ஸ்டாலின் தான் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil the main reason for neet exam is stalin
நீட் தேர்வை கொண்டு வந்ததே ஸ்டாலின்தான்: அமைச்சர் ஜெயக்குமார் நெத்தியடி


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமர் பேசியதாது:
“நீட் தேர்வை கொண்டுவந்ததே திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டனிதான் தான். இதனை மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற நினைப்போடு அரசியலாக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுகிறார்.

ஆனால் அந்த சம்பவத்தை மக்கள் மறக்கவிலை என்றும் அவர்கள் ஸ்டாலினை மன்னிக்க மாட்டார்கள்.. எனவே அவர்கள் ஒருங்கிணைந்து போராடுவதற்கு எந்த உரிமையும், தகுதியும் இல்லை.

தமிழ் மண்ணில் பிறந்த அன்பு தங்கையின் மரணம் அதிக வேதனை அளிக்கிறது. இதனை புரிந்து கொண்டு தான் முதலமைச்சர் அனைத்து உதவிகளையும் அனிதாவின் குடும்பத்திற்கு செய்வதாகக் கூறினார். ஆனால் அவர் குடும்பத்தினர் கோபமாக இருப்பதால் அதை அவர்கள் மறுத்துவிட்டனர். ஆனால் நிச்சயமாக அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று ஜெயக்குமார் கூறினார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வினால் தனது மருத்துவ கனவு கலைந்த துயரத்தில் அரியலூர் மாணவி தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஸ்டாலின் தான் அடிப்படை காரணம் என ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

the main reason for neet exam is stalin

அடுத்த செய்தி