ஆப்நகரம்

தமிழ்நாட்டில் எதற்கெல்லாம் அனுமதி? வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

Samayam Tamil 19 Jun 2021, 8:26 am
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் நல்ல பலனளித்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
Samayam Tamil tn extends lockdown


நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 36ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகிவந்த நிலையில் நேற்றைய நிலவரம் 9ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. சென்னையில் 7ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்பு 500 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு குறைந்துள்ளதால் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிடிஆர் பதவியை உருவும் ஸ்டாலின்? என்ன நடக்கிறது மேல் மட்டத்தில்?
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மே 21ஆம் தேதி காலையுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பின்னர் முக்கிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் இன்று மதியம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இம்முறை எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்படும் என கோட்டை வட்டாரங்களில் விசாரித்தோம்.
லண்டன் புறப்படும் மு.க.ஸ்டாலின்? என்ன காரணம்?
*பாதிப்பு குறைவாக பதிவாகும் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் மாவட்டத்துக்குள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

*சிறிய நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்க வாய்ப்புள்ளது.

*சிறிய வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்க வாய்ப்புள்ளது.

*மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் நிலையில் இம்முறை அதற்கான கால அளவு நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது.

*பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் பாதிப்பை கணக்கில் கொண்டு இந்த மாவட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி