ஆப்நகரம்

வருகிறது வடக்கிழக்குப் பருவமழை!

தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடக்கிழக்குப் பருவமழை நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNN 14 Oct 2017, 1:38 pm
சென்னை: தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடக்கிழக்குப் பருவமழை நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil the northeast monsoon is expected to start from november first week
வருகிறது வடக்கிழக்குப் பருவமழை!


ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கும் வடக்கிழக்கு பருவமழை இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பெய்த தென்மேற்குப் பருவமழையால், ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. சென்ற மழை இல்லாததால் சோகத்திலிருந்த விவசாயிகள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், வடக்கிழக்குப் பருவமழை பற்றிய அறிவிப்பு மேலும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டைப் பொருத்தமட்டில், மழையின் அளவு சராசரியாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நவம்பர் முதல் வாரத்தில் மட்டும் பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு ஆரம்பமாக அடுத்த 24 மணிநேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுமையம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

The Northeast Monsoon is expected to start from November first week!

அடுத்த செய்தி