ஆப்நகரம்

முதல்வருக்கு நைட்டி, சேலை அனுப்பி நூதன போராட்டம்!!

ஈரோட்டில் முதல்வருக்கு நைட்டி மற்றும் சபாநாயகருக்கு சேலை அனுப்பி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

TNN 21 Sep 2017, 1:20 pm
ஈரோட்டில் முதல்வருக்கு நைட்டி மற்றும் சபாநாயகருக்கு சேலை அனுப்பி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Samayam Tamil the persons from erode sends nighty for edappadi palanisamy and saree for p dhanapal
முதல்வருக்கு நைட்டி, சேலை அனுப்பி நூதன போராட்டம்!!


ஈரோடு கிழக்கு மாவட்ட கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்க செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நிர்வாகிகள் ஈரோடு காந்திஜி சாலையில் இந்த நூதன போரட்டதில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஸ்பீடு போஸ்ட் மூலம் முதல்வருக்கு நைட்டியும், சபாநாயகருக்கு சேலையும் அனுப்பும் நூதன போராட்டம் நடத்தினர்.

''பெரும்பான்மையை இழந்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடாத சபாநாயகர் தனபால், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இது ஜனநாயக படுகொலை ஆகும் .எனவே இதை கண்டித்து போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 24 ஆம் தேதி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளோம்'' என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு காவல்துறையினர் போராட்டம் நடத்திய கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகதீசன், தொண்டர் அணி அமைப்பாளர் சசி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மோகன், பவானி ஒன்றிய செயலாளர் சவுந்தர், செய்தி தொடர்பாளர் விவேக்ராஜ் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

அதன்பிறகு அந்த 8 பேரையும் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தனர்.

அடுத்த செய்தி