ஆப்நகரம்

ஐயோ...ஐயோ... சென்னைக்கு விடிவே இல்லையா? மீண்டும் 6, 7ல் கனமழையாம்!!

தமிழத்தில் வரும் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 4 Nov 2017, 2:56 pm
தமிழத்தில் வரும் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 7th november looks very good for one intense spell
ஐயோ...ஐயோ... சென்னைக்கு விடிவே இல்லையா? மீண்டும் 6, 7ல் கனமழையாம்!!


தமிழத்தில் வடகிழக்கு பருவ மழையின் துவக்கமே பயங்கரமாக இருந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து பதிவிட்டு வருகிறார்.

இன்றைய அவரது பதிவில், ''இன்று சென்னையில் அங்கும், இங்கும் மழை இருக்கும். பயப்படும்படியாக இருக்காது. விட்டு விட்டு மழை இருக்கும். சென்னைக்கு மழை இனி இல்லை என்று முடிவு செய்து விட வேண்டாம். வரும் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கனமழை இருக்கிறது. அந்த இரண்டு நாட்களிலும் அதிக மழையை நாம் பார்க்கப் போகிறோம்.

இன்று முதன் முறையாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை இருக்கும். உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சிவகிரி (ஈரோடு) ஆகிய இடங்களில் இன்று மழை இருக்கும். இலங்கை அருகே இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது சிறிது நகர்ந்து மேற்குப் பகுதிக்கு சென்றுள்ளது. கோயமுத்தூர், ஈரோடு மாவட்டத்தின் சில இடங்கள், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று மழை இருக்கும்.

வடக்கு உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் இன்று மழை இருக்கும். நீலகிரியின் குன்னூரில் வரும் நாட்களில் மழை பெய்யும்'' என்று தெரிவித்துள்ளார்.

The rains from this low is not yet over in Chennai, we are going to see more rains and 6/7th November looks very good for one intense spell

அடுத்த செய்தி